கல்வியை டிஜிட்டல் மயமாக்கும் செயற்றிட்டத்தின் கீழ், 100 கோடி ரூபா செலவில் ஆயிரம் பாடசாலைகளுக்கு இணைய வசதிகள் வழங்கும் வேலைத்திட்டத்தை, 3ம் தாவணை கற்றல் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படும் போது நடைமுறைப்படுத்தவுள்ளதாக கல்வியமைச்சர் சுசில் பிரேம ஜயந்த தெரிவித்துள்ளார். ஆசிரியர்கள் எதிர்நோக்கும் நிர்வாகப் பிரச்சினைகளுக்குத் தீர்வுகளைப் பெற்றுக்கொடுக்க, நாடளாவிய ரீதியில் கல்வி வலங்களின் எண்ணிக்கைய 120 ஆக அதிகரிப்பதற்கும் தாம் எதிர்பார்த்துள்ளதாக கல்வியமைச்சர் தெரிவித்துள்ளார்.