பாராளுமன்றத்திலுள்ள 25 ஊழியர்கள் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
பாராளுமன்ற பொலிஸ் புலனாய்வுப் பிரிவுடன் தொடர்புபட்ட பொலிஸ் அதிகாரி ஒருவருக்கு கொவிட்-19 ஏற்பட்டது உறுதிப்படுத்தப்பட்டதை அடுத்து இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
பாராளுமன்ற படைக்கல சேவிதர் நரேந்திர பெர்ணான்டோ தகவல் தருகையில், கொவிட் 19 பாதிக்கப்பட்டதாக சந்தேகத்துக்குரிய ஒருவருடன் நெருங்கிய தொடர்பிலுள்ள இருவருக்கு பிசிஆர் சோதனை நடத்தப்பட்டது. அதில் கொவிட்-19 தொற்று இல்லை என்ற முடிவு வந்துள்ளது. அவர்களது சோதனையின் அடிப்படையில், பாராளுமன்றத்தின் ஏனைய அதிகாரிகளுக்கு பிசிஆர் சோதனை செய்யத் தேவையில்லை எனவும் அவர்களை சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்துமாறும் சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளதாக அவர் மேலும் கூறினார்.