பாராளுமன்றத்தில் மேலும் 22 பொலிஸ் அதிகாரிகளுக்கு பி.சி.ஆர். பரிசோதனை

0
173

பாராளுமன்ற பொலிஸ் அதிகாரியுடன் நெருங்கிய தொட ர்பு கொண்டிருந்த 22 பொலிஸ் அதிகாரிகளுக்கு பி.சி.ஆர் பரிசோதனை இன்று மேற்கொள்ளப்படும் என சுகாதாரப் பிரிவு தெரிவித்துள்ளது.

அத்துடன், பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு பி.சி.ஆர் பரி சோதனை மேற்கொள்ளவது குறித்து சுகாதார அமைச் சின் செயலாளருக்கு கடிதம் ஒன்று அனுப்பப்பட்டதாக சார்ஜென்ட்-அட்-ஆர்ம்ஸ் நரேந்திர பெர்னாண்டோ தெரிவித்தார்.

இதற்கிடையில், ஸ்ரீ ஜெயவர்தனபுர பாராளுமன்ற வளா கத்தை மூடிவிட்டு இன்று வளாகத்தைத் தொற்று நீக்கம் செய்யத் தீர்மானித்துள்ளனர்.

அத்துடன், தொற்று நீக்கம் செய்யப்பட்ட பின்னர், பாராளு மன்றம் நாளை தனது பணிகளை மீண்டும் ஆரம்பிக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.