இராஜாங்க அமைச்சர் டயானா கமகே, ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்களான ரோஹன பண்டார மற்றும் சுஜித் சஞ்சய பெரேரா ஆகியோர் பாராளுமன்ற உறுப்பினர்களின் நூலகத்திற்கு அருகில் வாக்குவாதத்தில் ஈடுபட்டமைக்காக ஒரு மாத காலத்திற்கு பாராளுமன்றத்தில் இருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளனர்.பாராளுமன்ற உறுப்பினர் சமல் ராஜபக்ஷவினால் சபையில் சமர்ப்பிக்கப்பட்ட பாராளுமன்ற சிறப்புரிமைகள் குழுவின் அறிக்கையில் மூன்று பாராளுமன்ற உறுப்பினர்களையும் ஒரு மாத காலத்திற்கு இடைநீக்கம் செய்யுமாறு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.