பிரதமரின் அலுவலகத்திற்கு முன்பாகவுள்ள உணவகத்திற்கு அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சொகுசுக் கார், திடீரென
தீப்பற்றியதால் அப் பகுதியில் சிறுது நேரம் பதற்றமான நிலைமையேற்பட்டது.
காரை ஸ்டார்ட் செய்ய முற்பட்ட போது, கார் தீப்பற்றி எரிந்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது.
காரின் முன்பகுதி தீக்கிரையாகியுள்ளது.
பிரதமர் அலுவலகத்தின் பாதுகாப்புப் படையினரின் தலையீட்டில் கொழும்பு மாநகர சபையின் இரண்டு தீயணைப்பு வாகனங்களைப்
பயன்படுத்தி தீ கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டது.