பிரதமரின் பாதுகாப்பு அதிகாரிக்கு கொரோனா: பிரதமர் அலுவலகம் விளக்கம்!

0
226

பிரதமர் அலுவலகத்தில் சேவையில் ஈடுபட்டுள்ள பொலிஸ் அதிகாரியொருவர் கொவிட்-19 தொற்றுக்குள்ளாகி இருப்பதாக வெளியான செய்தியை பிரதமர் அலுவலகம் மறுத்திருக்கிறது.

இதுதொடர்பாக பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:

பிரதமர் அலுவலகம், அலரி மாளிகை மற்றும் விஜேராமவிலுள்ள பிரதமரின் உத்தியோகப்பூர்வ இல்லத்தில் சேவையாற்றும் பிரதமர் பாதுகாப்பு பிரிவின் எந்தவொரு அதிகாரியும் கொவிட்-19 தொற்றுக்கு உள்ளாகவில்லை என உறுதிபடுத்துகிறேன்.

பிரதமர் அலுவலகத்தில் பணியாற்றும் பொலிஸ் அதிகாரியொருவருக்கு கொவிட்-19 தொற்று ஏற்பட்டிருப்பதாக பரவிவரும் செய்தியில் எவ்வித உண்மைத் தன்மையும் இல்லாததுடன், பிரதமர் பாதுகாப்பு பிரிவுடன் இணைந்த வெளிப்புற பிரிவொன்றின் அதிகாரியொருவரே கொவிட் தொற்றுக்கு உள்ளாகியிருப்பதாக அடையாளம் காணப்பட்டுள்ளார்.

கௌரவ பிரதமர் பங்கேற்கும், வெளி நிகழ்வுகளின் பூரண பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பான தயார்படுத்தல்களின்போது மாத்திரம் பங்கேற்கும் குறித்த அதிகாரி கடந்த ஒக்டோபர் மாதம் 17ஆம் திகதி முதல் சேவைக்கு சமூகமளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பிரதமர் ஊடகப் பிரிவு