புதிய கிராம சேவை அலுவலர்கள் ஆட்சேர்ப்பு: நேர்காணல் எதிர்வரும் மார்ச்சில்

0
81

புதிய கிராம சேவை அலுவலர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கான நேர்காணலை எதிர்வரும் மார்ச் 13,14, மற்றும் 15ஆம் திகதிகளில் நடத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

தற்போது காணப்படும் கிராம உத்தியோகத்தர்களுக்கான வெற்றிடங்களை நிரப்புவதற்கு 2002 கிராம உத்தியோகத்தர்கள் மிக விரைவாக அரச சேவையில் இணைத்துக்கொள்ளப்படவுள்ளனர் என உள்நாட்டலுவல்கள் அமைச்சர் அசோக பிரியந்த தெரிவித்துள்ளார்.

அதன்படி 2023 டிசம்பர் 02 அன்று நடைபெற்ற கிராம அலுவலர் தேர்வில் தேர்ச்சி பெற்ற 4232 பேர் நேர்காணலில் கலந்துகொள்வதுடன் நேர்காணல் தொடர்பான கடிதங்கள் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் முகவரிக்கு அனுப்பிவைக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.