மேல் மாகாணம் உட்பட பல பகுதிகளில் அமுலிலிருந்த தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் இன்று அதிகாலை 5 மணிக்கு தளர்த்தப்பட்டதையடுத்து கொரோனா தொற்றுப் பரவலுக்கு மத்தயில் ´புதிய வழமை´ என்ற கோட்பாட்டுக்கு அமைய நாட்டின் செயல்பாடுகளை முன்னெடுத்துச் செல்லும் நடைமுறை ஆரம்பமாகியுள்ளது என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நிறுவனங்கள், தொழில்சாலைகள் போன்றவற்றை முன்னெடுத்துச் செல்வதில் கூடுதல் கவனம் தேவை. இதற்குரிய நிபந்தனைகளை சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. இதற்கமைய நிபந்தனைகளை அனுசரித்துச் செயல்படுவது பற்றி கவனம் செலுத்துமாறு பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
750
கொழும்பு, கம்பஹா, களுத்துறை, குருநாகல், காலி ஆகிய மாவட்டங்களிலுள்ள 27 பொலிஸ் பிரிவுகள் மறு அறிவித்தல் வரை தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்களாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன என கொரோனா தொற்றுப் பரவலைத் தடுப்பதற்கான தேசிய செயல்பாட்டு மையம் அறிவித்துள்ளது.