புதையுண்டவரை மீட்க வீட்டை இடிக்க இடம் கொடுத்த பெண்!!

0
14

தொழிலாளர்கள் சிலர் மண்மேட்டை வெட்டிக்கொண்டிருந்த போது திடீரென மண் சரிந்து வீழ்ந்ததால் 6 பேர் மண்ணில் புதையுண்டனர்.

 இந்த அனர்த்தம், மஸ்கெலியா – சாமிமலை குயின்ஸ்லண்ட் தோட்டத்தில் புதன்கிழமை (06) முற்பகல் 11.45 அளவில் இடம்பெற்றுள்ளது

மண்ணில் புதைந்தவர்களை மீட்கும் நடவடிக்கையின் போது ஒருவர் மண்ணின் ஆழத்தில் சிக்கிக்கொண்டதால் அவரை மீட்க அருகிலிருந்த வீட்டை உடைகக்கவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் குறித்த வீட்டின் உரிமையாளரான பெண் மனிதாபிமானத்துடன் அதற்கு இடமளித்து பாதிக்கப்பட்டவரை உயிருடன் மீட்டெடுக்க உதவினார்.