28.7 C
Colombo
Thursday, September 19, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

பொது மக்கள் தினம்: இரத்து செய்வதற்கு அரசாங்க சேவை ஆணைக்குழு தீர்மானம்

நிலவும் சூழ்நிலையின் அடிப்படையில் பொது மக்கள் தினம் உட்பட அனைத்து கூட்டங்களை இரத்து செய்வதற்கு அரசாங்க சேவை ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.

அதற்காக தன்னுடைய சேவை பெறுனர்களுக்காக புதிய சேவை ஒன்றை அறிமுகம் செய்ய ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.

அதனடிப்படையில் அரசாங்க சேவை ஆணைக்குழுவில் கோரிக்கையை முன்வைக்கும் போது அடையாள அட்டை இலக்கம் மற்றும் தொலைபேசி இலக்கத்தை பதிவு செய்வதன் ஊடாக தொலைபேசி இலக்கத்திற்கு விஷேட இலக்கம் ஒன்றை குறுஞ் செய்தி ஊடாக அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

PSC <இடைவௌி> விஷேட இலக்கம் என்பவற்றை குறிப்பிட்டு 0704364462 என்ற இலக்கத்திற்கு குறுஞ்செய்தி அனுப்பவதன் ஊடாக கோரிக்கை தொடர்பான தற்போதைய நிலமையை உடனடியாக அறிந்து கொள்ள முடியும் என தெரிவிக்கப்படுகின்றது.

அல்லது www.psc.gov.lk என்ற இணையதளத்தில் விஷேட இலக்கத்தை பதிவு செய்து தகவல்களை அறிந்து கொள்ள முடியும் என தெரிவிக்கப்படுகின்றது.

அவ்வாறு இல்லாவிடின் கீழ் காணும் இலக்கங்களுக்கு தொடர்பு கொண்டு தகவல்களை பெற்றுக் கொள்ள முடியும் என தெரிவிக்கப்படுகின்றது.

011 -2136600 (பொது)
011 – 2136603 (மேலதிக செயலாளர்)
011 – 2136617 (செயலாளர்)

விஷேட அழைப்பு இருந்தால் மட்டும் அலுவலகங்களுக்கு வருமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles