நாட்டில் ஏற்பட்ட திடீர் நெருக்கடிக்கு ரணில் விக்ரமசிங்கவே காரண கர்த்தா எனத் தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். மீரிகமவில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
தான் ஆட்சியில் இல்லையென்றால் நாடு, பௌத்தம், இராணுவம் போன்றவற்றுக்கு ஆபத்து ஏற்படும் என ராஜபக்ஸ்களை இன்று அச்சுறுத்தி வந்தவர் இன்று எரிவாயு மற்றும் எரிபொருள் நெருக்கடி, டொலரின் பெறுமதி 400ரூபாயாக உயரும் என்று மக்களை அச்சுறுத்துகின்றார்.
2015 முதல் 2019 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் ரணில் வாங்கிய 12.5 பில்லியன் டொலர் பெறுமதியான இறையாண்மை பத்திர கடன்களையே கோட்டபய அரசாங்கம் செலுத்த முடியாது என அறிவித்தது. அவரே நாட்டில் எரிபொருள் இல்லாத ஒரு பொருளாதாரத்தை ஏற்படுத்தினார்.
நாட்டில் திடீரென டொலர் நெருக்கடி ஏற்பட்டு பொருளாதார நெருக்கடிக்கு உள்ளாவதற்கு ரணில் விக்ரமசிங்கவே பொறுப்பு கூற வேண்டும் எனத் தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.