நடிகர் விஜய் சேதுபதியின் 50வது படமாக ‘மகாராஜா’ உருவாகி உள்ளது.
குரங்கு பொம்மை படத்தை இயக்கிய நித்திலன் சாமிநாதன் இப்படத்தை இயக்கியுள்ளார். சுதன் சுந்தரம் மற்றும் ஜெகதீஷ் பழனிச்சாமி இணைந்து தயாரிக்கின்றனர்.
பேன் இந்தியா படமாக உருவாகும் இப்படத்தில் அனுராக் காஷ்யப், மம்தா மோகன்தாஸ், நட்டி, முனிஷ்காந்த், சிங்கம் புலி, பாரதிராஜா, வினோத் சாகர், பி.எல்.தேனப்பன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
இந்தப் படத்துக்கு அஜனீஷ் லோக்நாத் இசையமைக்கிறார். இப்படத்தின் டிரைலர் மற்றும் முதல் பாடல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றது.
இந்நிலையில், மகாராஜா திரைப்படத்துக்கு தணிக்கைக் குழு யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது. இப்படம் ஜூன் 14 ஆம் தேதி வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.