மட்டக்களப்பில் குரங்குகளில் தொல்லை அதிகரிப்பு!

0
130

மட்டக்களப்பு மண்முனை தென் எருவில் பற்று பிரதேசத்தின் களுதாவளை, களுவாஞ்சிகுடி, தேற்றாத்தீவு, மாங்காடு உள்ளிட்ட பல பகுதிகளில் குரங்களின் தொல்லைகள் அதிகரித்துள்ளதாக அப்பகுதி மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.


பகல் வேளையில் கிராமங்களுக்குள் கூட்டம் கூட்டமாக உட்புகும் குரங்கு;கள், வீடுகளின் மேல் தாவித் திரிவதனால் வீட்டுக் கூரைகளில் சேதமடைகின்றன.
பயன்தரு மரங்களையும் குரங்குள் சேதப்படுத்தி வருகின்றன.
சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குரங்குகளைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.