மட்டக்களப்பில் சர்வதேச புகைத்தல் மற்றும் மது எதிர்ப்பு தினத்தினை முன்னிட்டு பல்வேறான நிகழ்வுகள் ஏற்பாடு

0
162

மட்டக்களப்பில், சர்வதேச புகைத்தல் மற்றும் மது எதிர்ப்பு தினத்தினை முன்னிட்டு ஆரோக்கியமான வாழ்வினை கட்டியெழுப்பும் எனும் தொனிப்பொருளில் பல்வேறு நிகழ்வுகள் இடம்பெற்று வருகின்றன.

மகளிர், சிறுவர் அலுவல்கள் மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சு, மட்டக்களப்பு மாவட்ட சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களம் மற்றும் மண்முனை வடக்கு சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களமும் இணைந்து மரதனோட்ட நிகழ்வினை இன்று மட்டக்களப்பில் ஏற்பாடு செய்திருந்தன. மாவட்ட சமுர்த்தி அபிவிருத்தி திணைக்கள பணிப்பாளர் ராஜ்பாபு தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜே.ஜே.முரளிதரன் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.
மாவட்ட விளையாட்டு உத்தியோகத்தர் ஈஸ்பரனின் ஒழுங்கமைப்பில் மரதன் ஓட்ட நிகழ்வு இடம் பெற்றது.

மரதன் ஓட்டப்போட்டியானது இளைஞர்கள் மத்தியில் போதைப்பொருள் பாவனையை தடுக்கும் வகையிலான விழிப்புணர்வு நிகழ்வாக
நடாத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.