மட்டக்களப்பில் பாடசாலை அதிபர்களின் தலைமைத்துவப் பண்பு, முகாமைத்துவம் மற்றும் திறன்களை விருத்தி செய்யும் நோக்குடன் ஒருநாள் செயலமர்வு இன்று நடைபெற்றது.
கல்வியமைச்சின் ஏற்பாட்டில் முஸ்லிம் பாடசாலைகள் பிரிவின் வழிநடத்தலில் செயலமர்வு ஒழுங்கு செய்யப்பட்டது.
செயலமர்வில் மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்திலுள்ள 78 முஸ்லிம் பாடசாலைகளின் அதிபர்கள் பங்கேற்றனர்.
கல்வியமைச்சின் முஸ்லிம் பாடசாலைகள் பிரிவின் பிரதிக் கல்விப்பணிப்பாளர் தலைமையில் செயலமர்வு நடைபெற்றது.
செயலமர்வில் மட்டக்களப்பு மத்தி வலயக் கல்விப்பணிப்பாளர் எம்.எம்.ஜவாத், கிழக்குப் பல்கலைக்கழகத்தின்
சிரேஷ்ட விரிவுரையாளர் பொறியிலாளர் வினோத்ராஜ் மற்றும் ஆசிரிய வள நிலையத்தின் முகாமையாளர் ஏ.றியாஸ்
ஆகியோர் சிறப்பு விரிவுரையாற்றினர்.
தகவல் தொழில்நுட்பம் தொடர்பாகவும் செய்முறைப் பயிற்சிகளும் வழங்கப்பட்டன.