சுற்றாடல் பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு சுற்றுச்சூழல் பாதுகாப்பு நடவடிக்கையாக உக்காத பொலிதீன், கண்ணாடி,பிளாஸ்டிக், தகரம், இலத்திரனியல் ஆகிய கழிவுகளை மீள்சுழற்ச்சிக்கு பயன்படுத்தும் திட்டத்தினை வன்னிகோப் அவுஸ்திரேலிய நிறுவன நிதி அனுசரணையில் தீரனியம் திறந்த பாடசாலை
மட்டக்களப்பு நகரில் கழிவுகளை வகைப்படுத்தும் இரும்புத்தொட்டிகளை பாடசாலைகளுக்கு வழங்கி வருகின்றது.
கழிவு சேகரிக்கும் நிரந்தர தொட்டி கையளிக்கும் நிகழ்வு இயேசு சபை துறவிகளுடைய பாடசாலையான அறுப்பே கல்லூரியில் இன்று இடம்பெற்றது. ‘சுற்றாடலை பேணி பாதுகாப்போம்’ எனும் தொணிப்பொருளில்,
மாணவர்கள் மத்தியில் விழிப்புணர்வு நிகழ்வு மற்றும் மாணவர்களால் சுற்றாடலை பாதுகாக்கும் வகையில் பதாகைகள் காட்சி படுத்தல், பாடல், பேச்சு, போன்றன நிகழ்வுகள் இடம்பெற்றது.
கல்லூரி அதிபர் அருட்தந்தை ரேசான் தலைமையில் நடைபெற்ற கழிவு சேகரிக்கும் தொட்டி வழங்கும் நிகழ்வில் தீரனியம் பாடசாலை அதிபர் அருட்சகோதரர் மைக்கல், கிழக்கு பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் வைத்தியர் வைதேகி ரஜீவன்,
சுற்றுச் சூழல் திணைக்கள உத்தியோகத்தர் கோகுலன், மட்டக்களப்பு வலயக்கல்வி அலுவலக பிரதி கல்வி பணிப்பாளர் ஹரிஹர ராஜ், வாழைச்சேனை ஆதார வைத்தியசாலை வைத்திய நிபுணர் ஜூடி ஜெயகுமார், கல்லூரி தலைமை ஆசிரியர் பெனடிக்ட் அன்ரனி, பாடசாலை ஆசிரியர்கள் மாணவர்கள் கலந்து கொண்டனர்.