மட்டக்களப்பு ஆரையம்பதி காங்கேயனோடை பத்ர் ஜூம்ஆப் பள்ளி வாயிலின் ஏற்பாட்டில் இன்று முப் பெரும் விழாக்கள் நடாத்தப்பட்டன.
பள்ளி வாயலின் ஆரம்பகால நிர்வாக சபை தலைவர்கள் மற்றும் பள்ளி வாயல் முன்னேற்றத்துக்கு தொடர்ச்சியாக பங்களிப்பு செய்தவர்களை கௌரவிக்கும் நிகழ்வும், ரமழான் கால போட்டி நிகழ்ச்சிகளில் வெற்றியீட்டிய மாணவர்களுக்கான பரிசளிப்பு நிகழ்வும் மற்றும் குர்ஆன் மதரஸாக்கள் அபிவிருத்தி சபையினால் நடாத்தப்பட்ட இறுதிப் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கான கௌரவிப்பு என முப்பெரும் நிகழ்வுகள் இடம் பெற்றன.
காங்கேயனோடை பத்ர் ஜூம்ஆப் பள்ளி வாயலின் தலைவர் மக்கீன் தலைமையில் நடைபெற்றவிழாவில் காத்தான்குடி ஜாமிஅத்துஸ் சித்தீகியா பெண்கள் அரபுக் கல்லூரியின் அதிபர் அப்துல் கபூர் மதனி சிறப்புரையை நிகழ்த்தினார்.
காங்கேயனோடை பிரதேச முக்கியஸ்தர்கள், பள்ளிவாசலின் நிர்வாகிகள், பொது மக்கள் என பலரும் நிகழ்வில் கலந்து கொண்டனர்.