மட்டக்களப்பு ஆரையம்பதி சிகரம் ஜூம்ஆப் பள்ளிவாயலில் எகெட் கரிட்டாஸ் நிறுவனத்தின் மட்டக்களப்பு மாவட்ட பல் சமய ஒன்றித்தின் ஏற்பாட்டில் சர்வமத தலைவர்கள் கலந்து கொண்ட சர்வமத நல்லிணக்க இப்தார் நிகழ்வு நேற்று மாலை இடம்பெற்றது.
எகெட் கரிட்டாஸ் நிறுவனத்தின் மண்முனைப் பற்று பல் சமய ஒன்றிய செயற்பாட்டாளர் எம்.வை.ஆதம் தலைமையில் நடைபெற்ற இப்தார் நிகழ்வில்
எகெட் கரிட்டாஸ் நிறுவனத்தின் மட்டக்களப்பு மாவட்ட பல் சமய ஒன்றித்தின் தலைவர் சிவசிறீ சிவபாலன் குருக்கள், நிறுவனத்தின் முன்னாள் இயக்குநர் அருட்தந்தை ஜேசுதாசன்,
செயலாளர் அருட்தந்தை ஜெகதாஸ், மண்முனைப் பற்று பிரதேச செயலாளர் திருமதி கௌரி தினேஸ் மற்றும் மண்முனைப் பற்று பிரதேச சபை செயலாளர் சர்வேஸ்வரன் உட்பட பல் சமய சமூக முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர்.
இதன் போது சமய தலைவர்களின் விஷேட உரைகளும் இடம் பெற்றன.
Home கிழக்கு செய்திகள் மட்டக்களப்பு ஆரையம்பதி சிகரம் ஜூம்ஆப் பள்ளிவாயலில் சர்வமத நல்லிணக்க இப்தார் நிகழ்வு