மட்டக்களப்பு ஏறாவூரில், மீலாத் தினத்தையொட்டி இன்று காலை ஊர்வலம் நடைபெற்றது. ஏறாவூரிலுள்ள மதராசாக்களின் ஒன்றியம் இதற்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தது.
மார்க்கக்கல்வி பயிலும் நூற்றுக்கணக்கான மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பிரதேச முக்கியஸ்தர்கள் பலர் ஊர்வலத்தில் பங்கேற்றனர். ஊர்வலத்தில் பங்கேற்ற மதரசா மாணவர்கள் பச்சைநிறக்கொடிகளை அசைத்து முகம்மது
நபிகளார் மீதான சலவாத்துச் சொல்லிச் சென்றனர். இறுதியாக விசேட பிரார்த்தனையுடன் நிகழ்வுகள் நிறைவுபெற்றன.