மட்டக்களப்பு ஏறாவூர் வாவிக்கரையை சுத்தமாக்கும் பணி நடைபெற்றது

0
119

சுற்றாடல் அமைச்சின் வழிகாட்டலில் மத்தியசுற்றாடல் அதிகார சபையுடன் இணைந்து உள்ளுராட்சி மன்ற பிரதேசங்கில் நடைமுறைப்படுத்தும் நகர தூய்மையாக்கல் விசேட வேலைத்திட்டத்தின்கீழ் மட்டக்களப்பு ஏறாவூர் வாவிக்கரையை சுத்தமாக்கும் பணி இன்று நடைபெற்றது.

ஏறாவூர் வாவிக்கரையிலுள்ள சிறுவர் பூங்காக்களை அண்மித்த பகுதிகள் மற்றும் வடிகான்கள் இத்திட்டத்தின் கீழ் துப்பரவு செய்யப்பட்டன. மேலும் ஏறாவூர் வாவியோரம் அமைந்துள்ள திண்மக்கழிவு முகாமைத்துவ நிலையத்தையும் அமைச்சர் நஸீர் அகமட் பார்வையிட்டார்.

சுற்றாடல் அமைச்சர் நசீர் அகமட்டின் தலைமையில் நடைபெற்ற வேலைத்திட்டத்தில் மத்திய சுற்றாடல் அதிகார சபையின் தலைவர் பத்திரகேரூபவ் பணிப்பாளர் நாயகம் ஹேமந்த ஜயசிங்க மற்றும் அதிகாரிகளுடன் ஏறாவூர் நகர சபையின் செயலாளரும்
அதிகாரம் பெற்ற உத்தியோகத்தருமான ஹமீம் பொலிஸ் நிலையப்பொறுப்பதிகாரி ஹர்ஷ டி சில்வா மற்றும் உத்தியோகத்தர்களும் கலந்துகொண்டனர்.