மட்டக்களப்பு மாவட்டத்தில், காத்தான்குடி,களுவாஞ்சிக்குடி போன்ற கடற்பகுதிகளில், நாவல் மற்றும் கறுப்பு நிறம் கலந்த ஒரு வகை மீனினமொன்று
அதிகளவில் கரையொதுங்கி வருவதை அவதானிக்க முடிகின்றது.
கடற்கரைகளுக்கு வருகை தரும் சிறுவர்கள் மற்றும் பெரியவர்கள் மீன்களை வீடுகளுக்கு எடுத்துச் செல்லும் நிலையில், இந்த வகை மீன் இனம்
உணவுக்கு பயன்படுத்த உகந்ததா? என பொதுமக்கள் கேள்வியெழுப்பியுள்ளனர்.
சுகாதார அதிகாரிகள் மற்றும் கடற்றொழில் திணைக்கள அதிகாரிகள் இவ்விடயம் தொடர்பில், கவனமெடுத்து, இவ் வகை மீன் இனங்கள் தொடர்பில்
தெளிவுபடுத்த வேண்டும் என்றும் சூழலியலாளர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.