25 C
Colombo
Tuesday, December 5, 2023
12,987FansLike
19,993SubscribersSubscribe

மட்டக்களப்பு காத்தான்குடியில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது

மோட்டார் வாகனங்களில் சைலன்ஸர் குழாய்களினை அகற்றி பெரும் சப்தத்துடன் பயணிப்பவர்களை பொது மக்களின் உதவியுடன் கைது செய்து, அவர்கள் மீது சட்ட நடவடிக்கை
எடுப்பதென மட்டக்களப்பு காத்தான்குடி பொலிசாருக்கும் காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத்துக்குமிடையில் கலந்துரையாடல் இடம்பெற்றது
காத்தான்குடி பள்ளிவாயல்கள் சம்மேளனத் தலைவர் றஊப் ஏ மஜீத் தலைமையில் இடம்பெற்ற இக் கலந்துரையாடலில், காத்தான்குடியின் போக்குவரத்து முறைகளை ஒழுங்குபடுத்துவதன் அவசியம் பற்றியும் இளைஞர்களது செயற்பாடுகள் பற்றியும் மிக விரிவாக கலந்துரையாடப்பட்டது.
இதனடிப்படையில், மோட்டார் வாகனங்களில் சைலன்ஸர் குழாய்களினை அகற்றி பெரும் சப்தத்துடன் பயணிப்பவர்களினை பொது மக்களின் உதவியுடன் கைது செய்வதெனவும், அவ்வாறு சைலன்சர்களினை அகற்றும் மோட்டார் வாகன திருத்துமிடங்கள் இனம் காணப்பட்டு உரிமையாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதெனவும் தீர்மானிக்கப்பட்டது.
கடற்கரை மற்றும் கடற்கரை பிரதான வீதி ஆகியவற்றில் போக்குவரத்து நடைமுறைகளை கன்டிப்பாக அமுல்படுத்துவது, தலைக்கவசம் அணியாமல் பயணிப்பவர்களுக்கெதிராக சட்ட
நடவடிக்கை மேற்கொள்வது, இரவு, நள்ளிரவு நேரங்களில் அநாவசியமாக வீதிகளில் உலாவுகின்ற இளைஞர்களுக்கெதிராக சட்ட நடவடிக்கை எடுப்பது, திருமண வைபவங்களின் போது
பொதுப் போக்குவரத்திற்கு இடைஞ்சலாக சப்தத்துடன் ஹோன் எழுப்புபவர்களை கைது செய்வது, போதைப் பொருள் பாவனை மற்றும் விற்பனை தொடர்பாக தீவிர கண்காணிப்பினை மேற்கொள்வதெனவும் தீர்மானிக்கப்பட்டது.
குறித்த விடயங்களில் பொது மக்கள் தங்களது ஒத்துழைப்பினை பொலிசாருக்கு வழங்க வேண்டுமெனவும் பொலிசார் கேட்டுக் கொண்டனர்.
கலந்துரையாடலில் பாத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எஸ்.என்.காரியவசம், குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி றஹீம், மோட்டார் போக்குவரத்து பொறுப்பதிகாரி சந்தன,
காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளன செயலாளர் சபீல் நழீமி, நிர்வாக சபை உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

Related Articles

பாடசாலை கல்வி முறைமையில் மாற்றம்!

பாடசாலை தரங்களின் எண்ணிக்கையை 13 இல் இருந்து 12 ஆகக் குறைப்பதற்கு முன்மொழியப்பட்டிருப்பதாக உத்தேச புதிய கல்வி மறுசீரமைப்பை வெளியிட்டு கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.பாராளுமன்றத்தில் சபை முதல்வர் கல்வி அமைச்சர்...

ஹோட்டல் விருந்து கொலையில் முடிந்தது!

ஜா-எல பிரதேசத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றில் நேற்று இடம்பெற்ற விருந்தின் போது இடம்பெற்ற வாக்குவாதம் நீடித்ததில் இடம்பெற்ற மோதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.உயிரிழந்தவர் தும்பேலிய, ஜா-எல பகுதியைச் சேர்ந்த 34 வயதுடையவராவார்.உயிரிழந்த...

போலி ஸ்டிக்கர் சோதனை மூலம் மதுவரித் திணைக்களத்தின் வருமானம் அதிகரிப்பு!

மதுபான போத்தல்களில் ஒட்டப்பட்டுள்ள போலி ஸ்டிக்கர்களை சோதனை இட்டதன் மூலம் இலங்கை மதுவரித் திணைக்களத்தின் மாதாந்த வருமானம் ஒரு பில்லியன் ரூபாவால் அதிகரித்துள்ளதாக தேசிய பொருளாதார மற்றும் பௌதீகத் திட்டங்கள்...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest Articles

பாடசாலை கல்வி முறைமையில் மாற்றம்!

பாடசாலை தரங்களின் எண்ணிக்கையை 13 இல் இருந்து 12 ஆகக் குறைப்பதற்கு முன்மொழியப்பட்டிருப்பதாக உத்தேச புதிய கல்வி மறுசீரமைப்பை வெளியிட்டு கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.பாராளுமன்றத்தில் சபை முதல்வர் கல்வி அமைச்சர்...

ஹோட்டல் விருந்து கொலையில் முடிந்தது!

ஜா-எல பிரதேசத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றில் நேற்று இடம்பெற்ற விருந்தின் போது இடம்பெற்ற வாக்குவாதம் நீடித்ததில் இடம்பெற்ற மோதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.உயிரிழந்தவர் தும்பேலிய, ஜா-எல பகுதியைச் சேர்ந்த 34 வயதுடையவராவார்.உயிரிழந்த...

போலி ஸ்டிக்கர் சோதனை மூலம் மதுவரித் திணைக்களத்தின் வருமானம் அதிகரிப்பு!

மதுபான போத்தல்களில் ஒட்டப்பட்டுள்ள போலி ஸ்டிக்கர்களை சோதனை இட்டதன் மூலம் இலங்கை மதுவரித் திணைக்களத்தின் மாதாந்த வருமானம் ஒரு பில்லியன் ரூபாவால் அதிகரித்துள்ளதாக தேசிய பொருளாதார மற்றும் பௌதீகத் திட்டங்கள்...

இரு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதி விபத்து: ஒருவர் பலி!

அனுராதபுரம் பாதெனிய வீதியில் அம்பன்பொல பேருந்து நிலையத்திற்கு அருகில் நேற்று இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.பாதெனியவில் இருந்து அனுராதபுரம் நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள், கிளை வீதியிலிருந்து பிரதான...

பால் புரையேறியதில் பச்சிளம் குழந்தை உயிரிழப்பு!

யாழ்ப்பாணம் - மிருசுவில் வடக்கு கொடிகாமத்தை சேர்ந்த குழந்தையொன்று பால் புரையேறியதில் உயிரிழந்துள்ளது. பிறந்து 26 நாட்களேயான ராசன் அஷ்வின் என்ற குழந்தை இவ்வாறு உயிரிழந்துள்ளது.