மட்டக்களப்பு காத்தான்குடி பெட்மின்டன் கழகத்தினால் பெட்மின்டன் சுற்றுப் போட்டி நடைபெற்றது.

0
127

மட்டக்களப்பு காத்தான்குடி பெட்மின்டன் கழகம், அல்ட்ரா நிறுவனத்தின் அனுசரணையுடன் அல்ட்ரா பெட்மிண்டன் சம்பியன்ஸ் கிண்ணத்திற்கான பெட்மின்டன் சு
ற்றுப் போட்டியினை நேற்று நடாத்தியது.
காத்தான்குடி அல்ட்ரா பெட்மிண்டன் உள்ளக விளையாட்டு அரங்கில் நடைபெற்ற போட்டியில், இருபது வயதுக்கு உற்பட்டோர், நாற்பது வயதுக்கு மேற்பட்டோர், இருபது வயதுக்கு மேற்பட்ட அணிகள் என 48 அணிகள் பங்கு பற்றின.
அல்ட்ரா நிறுவனத்தின் தவிசாளர் உனைஸ் தலைமயில் இடம்பெற்ற நிகழ்விற்கு பிரதம அதிதியாக, முன்னாள் கிழக்கு மாகாண ஆளுநர் கலாநிதி எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புழ்ழாஹ் பங்கேற்றார்.
நிகழ்வில் காத்தான்குடி கோட்டக் கல்வி பணிப்பாளர் ஹக்கீம், நகர சபை முன்னாள் தவிசாளர் அஸ்பர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டதுடன், வெற்றி பெற்ற அணிக்கு வெற்றிக் கிண்ணங்களும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.