மட்டக்களப்பு காத்தான்குடியில் சுய தொழில் பயிற்சியை முடித்த யுவதிகளுக்கு சான்றிதழ்கள்

0
94

மட்டக்களப்பு காத்தான்குடி பள்ளி வாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளன கூட்டு சகாத் திட்டத்தின் கீழ் சுய தொழில் பயிற்சியை முடித்த யுவதிகளுக்கான
சான்றிதழ் வழங்கும் நிகழ்வு இன்று மாலை காத்தான்குடி பள்ளி வாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளன மாநாட்டு மண்டபத்தில்
நடைபெற்றது.
காத்தான்குடி பள்ளி வாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளன தலைவர் ரவூப் ஏ.மஜீத் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் வைத்தியர் திருமதி அலீமா ரஹ்மான்
சிறப்புரையை நிகழ்த்தினார்.
இதில் காத்தான்குடி பள்ளி வாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளன கூட்டு சகாத் திட்டத்தின் செயலாளர் அஜூன் நழீமி, சம்மேளன கூட்டு சகாத் திட்டத்தின் நிறைவேற்று பொறுப்பாளர் எம்.எச்.ஏ.எம்.இஸ்மாயில் மற்றும் சம்மேளன உதவி தலைவர் மௌலவி எம்.ஐ.ஆதம்லெவ்வை உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
3 மாத சுய தொழில் பயிற்சியை நிறைவு செய்த 40 யுவதிகளுக்கு சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.