மட்டக்களப்பு காத்தான்குடி பிரதேச செயலக சிறுவர் பெண்கள் பிரிவு மற்றும் சமுர்த்தி பிரிவு ஆகியவற்றின் ஏற்பாட்டில் சிறுவர் தின நிகழ்வுகள் இன்று
மாலை காத்தான்குடி ஹிழுறியா வித்தியாலய உள்ளக விளையாட்டு அரங்கில்
நடைபெற்றது.
சிறுவர்களுக்கான பலூன் உடைத்தல், முயலோட்டம் உட்பட பல்வேறு விளையாட்டு நிகழ்வுகள் நடைபெற்றன நிகழ்வுகளில் பங்கு பற்றிய அனைத்து சிறுவர்களுக்கும் பரிசில்கள் வழங்கப்பட்டன.
காத்தான்குடி பிரதேச செயலாளர் உதயசிறீதரின் வழிகாட்டலிலும் ஆலோசனையிலும் உதவி பிரதேச செயலாளர் திருமதி சீமியா தலைமையில்
நிகழ்வுகள் இடம் பெற்றன. பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.