மட்டக்களப்பு காத்தான்குடியில் சர்வமத தலைவர்கள் கலந்து கொண்ட இன ஐக்கிய மீலாத் விழா இன்று நடைபெற்றது.
காத்தான்குடி ஆலோசனைக்கும் வழிகாட்டலுக்குமான ஆலீம்கள் அமைப்பின் தலைவர் மௌலவி எச்;.எம்.ஸாஜஹான் தலைமையில் காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மண்டபத்தில் நிகழ்வு இடம்பெற்றது.
இன ஐக்கிய மீலாத் விழா ஊர்வலம் காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மண்டபத்திலிருந்து ஆரம்பமாகி காத்தான்குடி மீராபாலிகா தேசிய பாடசாலை வரை சென்று மீண்டும் ஹிஸ்புல்லாஹ் மண்டத்தில் நிறைவடைந்தது.
இன ஐக்கிய மீலாத் விழாவையொட்டி பாடசாலை மாணணவர்களிடையே நடாத்தப்பட்ட போட்டி நிகழ்ச்சிகளில் வெற்றியீட்டிய மாணவர்களுக்கு பரிசில்கள் சான்றிததழ்கள் என்பன வழங்கப்பட்டதுடன் காத்தான்குடி ஆதார வைத்தியசாலை அத்தியட்சகர் டாக்டர் எம்.எஸ்.எம்.ஜாபீர் உட்பட உலமாக்கள் சிலருக்கு நினைவுச்சின்னங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
விழாவின் சிறப்புரையை இலங்கை ஸரீஆ கவுன்சில் உப செயலாளரும் வத்தளை மஹ்மூதிய்யா அரபுக்கல்லூரியின் அதிபருமான மௌலவி சி.எம்.அஸ்மீர் ஹசனி நிகழ்த்தினார்.
காத்தான்குடி ஆதார வைத்தியசாலை அத்தியட்சகர் டாக்டர் எம்.எஸ்.எம்.ஜாபீர் பிரதம விருந்தினராக கலந்து கொண்ட நிகழ்வில், சமய தலைவர்கள் உலமாக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.