தென்னைப் பயிர் செய்கை தொடர்பான விரிவாக்கல் விழிப்புணர்வு கருத்தரங்கு நிகழ்வு மட்டக்களப்பு கிரான் ரெஜி கலாச்சார மண்டபத்தில் தென்னை பயிர்செய்கை சபை பிராந்திய முகாமையாளர் பெ.உதயச்சந்திரன் தலைமையில் இன்று நடைபெற்றது. கருத்தரங்கில் கோறளைப்பற்று தெற்கு கிரான் பிரதேசத்தினைச் சேர்ந்த தென்னைப பயிர் செய்கையாளர்கள் பங்குபற்றினர்.
மாவட்டத்தில் தென்னையுடன் ஊடு பயிர் செய்கைகளை ஒன்றினைக்கப்பட்டு விவசாயத்தினை ஊக்குவிப்பதற்கான முதலாவது நிகழ்வாக ஏற்பாடு செய்யப்பட்டது.
தென்னை பயிர் செய்கை, தென்னை பயிர் செய்கையுடன் ஊடு பயிர்கள் பயிரிடல், தென்னை சார்ந்த கைத்தொழில் உற்பத்திகள், நோய் பீடை தாக்கம் உரப் பாவனை மற்றும் ஏற்றுமதி வசதிகள் என்பன தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.
அத்துடன் தென்னைப் பயிர் செய்கையாளர்களையும் சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்குமிடையிலான தொடர்பை ஏற்படுத்தி அபிவிருத்தியை மேம்படுத்தல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. பயிர் செய்கையாளர்களுக்கு இலவசமாக உரம் மற்றும் பீடை கொல்லிகளும் வழங்கி வைக்கப்பட்டது.
குறித்த நிகழ்வில் தென்னைப் பயிர்செய்கை சபை, தென்னை அபிவிருத்தி அதிகார சபை, உர நிறுவனங்கள், கால் நடை அபிவிருத்தி திணைக்களம், வங்கிகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டு தங்களது ஆலோசனைகளை வழங்கினர்.