மட்டக்களப்பு கிரான்குளத்தில் அகத்தியர் மருத்துவ விழா சிறப்பாக இடம்பெற்றது.

0
137

அகத்தியர் மருத்துவ கூடலின் நான்காம் ஆண்டு நிறைவு மற்றும் அகத்தியரின் ஜனன தினத்தை முன்னிட்டு கிரான்குளம் பொது அமைப்புக்களுடன் ஒன்றிணைந்து நடாத்திய
மாபெரும் அகத்தியர் மருத்துவ விழா இன்று நடைபெற்றது.
அகத்தியர் மருத்துவ கூடல் தலைவர் வைத்தியர் வர்ணகுலசிங்கம் பிரவீன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வு நடைபெற்றது.
இரத்ததானம் மற்றும் மருத்துவ முகாமும் நடைபெற்றதோடு, புற்றுநோய், நீரிழிவு குழந்தையின்மை ஆகியன தொடர்பான மருத்துவம் சார் வழிகாட்டல் ஆலோசனைகளும்
வழங்கப்பட்டன.
நிகழ்வில் அதிதிகளாக கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் வ.கனகசிங்கம், கிழக்கு பல்கலைக்கழக சிரேஸ்ட விரிவுரையாளர் வைத்திய கலாநிதி க.அருளானந்தம், டொக்டர் கோ.திவாகர், டொக்டர் திருமதி த.சௌகந்தியா, ஆரையம்பதி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிற்குட்பட்ட மேற்பார்வை பொதுச் சுகாதார பரிசோதகர் எம்.புலேந்திரன், அகத்தியர் மருத்துவ கூடலின்
செயலாளர் பி.சதுர்வணன் உட்பட மட்டக்களப்பு சுகாதார வைத்திய பிரிவு மற்றும் ,ரத்த வங்கி பிரிவு ஆகியவற்றின் மருத்து குழாமினர் கலந்து கொண்டனர்.