மட்டக்களப்பு கிரான் கூட்டுறவுச் சங்கத்தின் புதிய பணிப்பாளார் சபையினரை வரவேற்கும் நிகழ்வு

0
85

மட்டக்களப்பு கிரான் கூட்டுறவுச் சங்கத்தின் புதிய பணிப்பாளார் சபையினரை வரவேற்கும் நிகழ்வு சம்பிரதாய பூர்வமாக இன்று நடைபெற்றது.
பழைய இயக்குனர் சபையின் பதவிக்காலம் முடிவடைந்ததால் புதிய இயக்குனர் சபையானது அண்மையில் தெரிவு செய்யப்பட்டது. பொதுச் சபையில் 5 கிளைக் குழுக்களை கொண்டமைந்த உறுப்பினர்கள் அனைவரும் ஒருமித்து போட்டியின்றி புதிய பணிப்பாளர் சபையினை தெரிவு செய்திருந்தனர். அதில் தலைவராக ஏ.பாலகிருஷ்ணன் தெரிவு செய்யப்பட்டார்.
பல நோக்கு கூட்டுறவு சங்க பணியாளர்களினால் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வில், புதிய பணிப்பாளார் சபையினர் வரவேற்க்கப்பட்டனர்.
நிகழ்வில் பிரதேச செயலாளர் எஸ்.ராஜ்பாவு, கூட்டுறவு அபிவிருத்தி உதவி ஆணையாளர் கே.வி.தங்கவேல், மதகுரு சிவஸ்ரீ மு.சண்முகம், தலைமை காரியாலய பரிசோதகர் எம்.ஜ.எம்.உசனார், சங்க கூட்டுறவு அபிவிருத்தி உத்தியோகஸ்த்தர் விஜேந்திரராஜா ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.