மட்டக்களப்பு கல்குடா கல்வி வலயத்தின் கிரான் மத்திய கல்லூரியின் 78வது கல்லூரி தினத்தை முன்னிட்டு, நேற்று நடைபவனி இடம்பெற்றது.
கல்லூரியின் அதிபர் தவராஜா தலைமையில் நடைபவனி முன்னெடுக்கப்பட்டது.
முறக்கொட்டான்சேனை பகுதியில் இருந்து ஆரம்பமான நடைபவனியானது, மட்டக்களப்பு கொழும்பு பிரதான வீதி சந்திவெளி ஊடாக கிரான் மத்திய கல்லூரியை சென்றடைந்தது.
நிகழ்வில் மட்டக்களப்பு உதவி மாவட்ட செயலாளர் நவேஸ்வரன், உதவி திட்டமிடல் பணிப்பாளர் நவநீதன், கல்லுரியின் அதிபர், பழைய மாணவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
கல்லூரியின் 78வது ஆண்டு தினத்தை முன்னிட்டு கேக்கினை வெட்டப்பட்டமை குறிப்பிடத்தக்கது.