28 C
Colombo
Saturday, July 27, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தில் விசேட யாக பூஜை

கிழக்கிலங்கையின் வரலாற்று சிறப்புமிக்க மட்டக்களப்பு மாவட்ட கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தில் இன்று காலை விசேட யாக பூஜை நடாத்தப்பட்டது.

ஆலயத்தின் பிரதமகுரு சிவஸ்ரீ மு.கு.சச்சிதானந்த குருக்களினால் ஹோமம் நடாத்தப்பட்டது. நாட்டில் இருந்து கொரனா தொற்று நீங்கவும் நாடு சுபீட்பமான காலத்தினை அடையவேண்டும் என இதன்போது பிரார்த்தனை செய்யப்பட்டது.

இந்த ஹோம வழிபாட்டில் ஆலயத்தின் வண்ணக்கர்கள், இந்துக்கலாசார திணைக்களத்தின் மட்டக்களப்பு மாவட்ட பணிப்பாளர் கே.குணநாயகம் உட்பட சிலர் பங்கேற்புடன் சுகாதார வழிமுறையின் கீழ் ஹோமம் நடாத்தப்பட்டது.

நாட்டில் அனைத்து மக்களும் நோய்நொடியின்றி வாழவேண்டும், இறைவனின் அவதாரமாக உள்ள சுகாதார துறையினரின் அறிவுறுத்தல்களை மக்கள் பின்பற்றவேண்டும் என இங்கு கருத்து தெரிவித்த கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தின் பிரதமகுரு சிவஸ்ரீ மு.கு.சச்சிதானந்த குருக்கள் மக்களிடம் வேண்டுகோள் விடுத்தார்.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles