மட்டக்களப்பு நகரில் இருவருக்கும், ஏறாவூரில் நான்கு பேருக்கும் கொரோனா தொற்று உறுதி

0
833

மட்டக்களப்பு மாவட்டத்தின் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை சற்று முன்னர் 60ஆக உயர்வடைந்துள்ளது.

மட்டக்களப்பு நகரில் இருவருக்கும், ஏறாவூர் பிரதேசத்தில் நான்கு பேருக்கும் கொரோனா தொற்று இன்று (2020.11.07) அடையாளம் காணப்பட்டதன் அடிப்படியில் மட்டக்களப்பு மாவட்டத்தில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 60ஆக உயர்வடைந்துள்ளதாக கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் அ.லதாகரன் தெரிவித்துள்ளார்.

இதன் அடிப்படியில், கிழக்கு மாகாணத்தில் மொத்த கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 100ஆக அதிகரித்துள்ளது.