மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரி ஆரம்பப் பிரிவு மாணவ தலைவர்களுக்கான சின்னஞ்சூட்டு நிகழ்வு

0
108

மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரி ஆரம்பப் பிரிவு மாணவ தலைவர்களுக்கான சின்னஞ்சூட்டு நிகழ்வு இன்று நடைபெற்றது. மட்டக்களப்பு மாவட்டத்தில் 150 வருட வரலாற்று சாதனைகளைப் படைத்த பழமை வாய்ந்த பாடசாலையான புனித மிக்கேல் கல்லூரி, கல்வி பயிலும் மாணவர்களின் கற்றல் செயல்பாட்டுடன் மாணவர்களின் திறன்களையும் விருத்தி செய்து, சமூகத்தில் தலைமைத்துவம் ஆளுமைகளை கொண்ட பிரஜைகளை உருவாக்கும் வகையில் செயற்பட்டு வருகிறது.
கல்லூரி செயற்பாட்டில் சிறந்த மாணவ தலைவர்களை தெரிவு செய்து முதன்மைப்படுத்தி வருகின்றனர்.


அதன் ஒரு செயற்பாடாக புனித மிக்கேல் கல்லூரியின் ஆரம்ப பிரிவு மாணவர்களுக்கான, மாணவத் தலைவர்களை தெரிவு செய்து அவர்களுக்கான மாணவ தலைமைத்துவ சின்னம் சூட்டு நிகழ்வு கல்லூரி அதிபர் அன்ரன் பெனடிக் ஜோசப் தலைமையில் இடம்பெற்றது.


நிகழ்வில் ஆரம்ப பிரிவு பாடசாலை பிரதி அதிபர் ரெனோல்ட் டே சி ஸ்பெக், உதவி அதிபர் அருட்தந்தை மெருஷன் ஹென்ரிக், பகுதி தலைவி நிரஞ்சலா பிரதீபன்,
பொறுப்பாசிரியர்களான காயத்ரி ஜோசப் நகுலன், புவனதர்சன் மற்றும் மாணவர்களின் பெற்றோர்களும் கலந்து கொண்டனர்.