சர்வேத சிறுவர் தினத்தை முன்னிட்டு, கல்வியமைச்சின் ஆலோசனைக்கமைய, மட்டக்களப்பு மாவட்டத்திற்கான பிரதான சிறுவர் தின நிகழ்வு, புனித மிக்கேல் கல்லூரியில் இன்று நடைபெற்றது.
மாகாண கல்விப் பணிப்பாளர் சுஜாதா குலேந்திரகுமாரின் வழிகாட்டலின் கீழ் ‘பிள்ளைகளைப் பாதுகாப்போம் சமமாக மதிப்போம்’ எனும் கருப் பொருளில்
அதிபர் ஏ.பி.ஜோசப் தலைமையில் நிகழ்வு இடம்பெற்றது சிறுவர் தின வரவேற்பு பதாகைகள் காட்சிப்படுத்தப்பட்டு மாணவர்கள் வரவேற்கப்பட்டனர்.
ஆசிரியர்களால் மாணவர்களுக்கு ஆசீர்வாதமும் வழங்கப்பட்டமை சிறப்பம்சமாகும்.