மட்டக்களப்பு புளியந்தீவு புனித மரியாள் பேராலயத்தில் சிறப்பு ஆராதனை

0
428

அதிவேகமாக பரவிவரும் தொற்றிலிருந்து எமது நாட்டையும், உலக நாடுகளிலுள்ள அனைத்து மக்களையும் பாதுகாக்க இறை ஆசி வேண்டி அனைத்து கிறிஸ்தவ தேவாலயங்களிலும் சிறப்பு ஆராதனைகளை மேற்கொள்ளுமாறு பிரதமர் பணிப்புரை விடுத்துள்ளார்.

அதற்கமைய மட்டக்களப்பு மாவட்ட கிறிஸ்தவ மத அலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் மாவட்ட கிறிஸ்தவ சமய அபிவிருத்தி உத்தியோகத்தர் ரேகா நிருபன் ஒழுங்கமைப்பில் புனித மரியாள் பேராலயத்தில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது.

மட்டக்களப்பு புளியந்தீவு புனித மரியாள் பேராலய பங்கு தந்தை வணக்கத்திற்குரிய சி.வி.அன்னதாஸ் அடிகளாரின் தலைமையில் கொவிட் 19 தொற்றிலிலிருந்து எமது நாட்டை பாதுகாக்கவும், அனைத்து மக்களும் உடல் ஆரோக்கியம் பெறவும், ஒவ்வொருவரும் அடுத்தவர் நலனில் அக்கறை கொள்ளவும் எமது நாடு இத்தொடரில் இருந்து விடுபட்டு வழமையான இயல்பு நிலைக்கு திரும்ப வேண்டியும் இத்திருப்பலி சுகாதார நடைமுறைகளை பின்பற்றி நடைபெற்றது.