மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை பிரதான சத்திரசிகிச்சை கூடத்தின் ஏற்பாட்டில் விசேட யாக பூஜை வழிபாடுகள் நடாத்தப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் தொற்றுநோய் இலங்கை நாட்டில் இருந்து நீங்கி மக்கள் சுபீட்சமான வாழ்வுக்கு செல்ல ஆசி வேண்டி மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை பிரதான சத்திரசிகிச்சை கூடத்தின் ஏற்பாட்டில் விசேட யாக பூஜை வழிபாடுகள் இன்று நடாத்தப்பட்டது.
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை ஸ்ரீ பழனி ஆண்டவர் ஆலயத்தில் வைத்தியசாலை பிரதான சத்திரசிகிச்சை கூடத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற விசேட யாக பூஜையானது ஆலய பிரதம குரு பகிரதன் சர்மா தலைமையில் சுகாதார வழிமுறைக்கமைய பொதுமக்கள் மட்டுப்படுத்தப்பட்ட நிலையில் வழிபாடுகள் நடைபெற்றது.
கொரோனா வைரஸ் நாட்டிலிருந்து விடுவித்து சுபீட்சமான ஒரு நாட்டை கட்டியெழுப்பி மக்களின் இயல்பு வாழ்க்கை திரும்புவதற்கு இறை பிராத்தனை மேற்கொள்ளும் செயற்திட்டத்தின் நடாத்தப்பட்ட விசேட யாக பூஜை வழிபாட்டு நிகழ்வில் போதனா வைத்தியசாலை பிரதான சத்திரசிகிச்சை பிரிவு வைத்திய நிபுணர்கள், தாதிய உத்தியோகத்தர்கள், சுகாதார உதவியாளர்கள் கலந்துகொண்டனர்.