விவசாய மற்றும் கிராமப்புற வளர்ச்சியை மேம்படுத்ததற்காக அறிவுத்திறன் மற்றும் சிறந்த அணுகுமுறை கொண்ட ஒரு தலைமுறையை உருவாக்கும் வேலை திட்டத்தின்
கீழ் கல்வி மற்றும் பயிற்சி பிரிவு ஹெக்டர் கொப்பேகடுவ கமநல ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிர்வாகம், உணவு பாதுகாப்பை உறுதி செய்வதற்காக வீட்டு மட்டத்தில்
மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் தொடர்பாக செயலமர்வுகளை தேசிய ரீதியில் முன்னெடுத்து வருகின்றது.
அதன் ஒரு வேலை வேலைத்திட்டமாக, கல்வி மற்றும் பயிற்சி பிரிவு ஹெக்டர் கொப்பேகடுவ கமநல ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிர்வாகம் விவசாய அமைச்சடன் இணைந்து
உணவு பாதுகாப்பை உறுதி செய்வதற்காக வீட்டு மட்டத்தில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் மட்டக்களப்பு மாவட்டத்தில் 14 பிரதேச செயலக பிரிவுகளில் முன்னெடுக்கப்படுகிறது.
அதன் ஒரு செயற்பாடாக, மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவில் தெரிவு செய்யப்பட்டவர்களுக்கான செயலமர்வு
இன்று இடம்பெற்றது
வளவாளர்களாக கல்வி மற்றும் பயிற்சி பிரிவு ஹெக்டர் கொப்பேகடுவ கமநல ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிர்வாக சிரேஷ்ட பயிற்றுவிப்பாளர் சுசீலா லூர்து மற்றும் சிந்தக
ஜெயசூர்யா, மத்திய வங்கி உத்தியோகத்தர்கள், மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவை அலுவலக உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.
Home கிழக்கு செய்திகள் மட்டக்களப்பு, மண்முனை வடக்கு பிரதேச செயலகப் பிரிவிலும்,வீட்டு உணவு பாதுகாப்பு விழிப்புணர்வு செயலமர்வு