மட்டக்களப்பு லியோ கழகத்தின் 42வது புதிய நிர்வாகத்தினர் பதவியேற்கும் நிகழ்வு, நேற்று மாலை மட்டக்களப்பு கல்லடியில் அமைந்துள்ள
தனியார் விடுதியொன்றில் இடம்பெற்றது.
லியோ கழகத்தின 2024-2025 ஆண்டுக்கான புதிய நிர்வாக தெரிவு கழகத்தின் தலைவர் ஹரிசாந்த் தலைமையில் இடம்பெற்றது. புதிய தலைவராக லியோ இந்திரராஜன் விதுபிரகாஷ் தெரிவு செய்யப்பட்டதுடன் 15 லியோ கழக செயற்குழு உறுப்பினர்களும் தெரிவு செய்யப்பட்டனர்.
புதிய நிர்வாக பதவியேற்பு நிகழ்வில் பிரதம விருந்தினராக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜஸ்டினா முரளிதரன் பங்கேற்றார்.நிகழ்வில் லயன்ஸ் கழகத் தலைவர் லயன் விஜயகுமார், புதிய நிர்வாகத்தின் கழக ஆலோசகர் லயன்.லோகேந்திரன், லயன்ஸ் தலைவர்கள்,லயன்ஸ் கழக உறுப்பினர்கள், லியோ கழக தலைவர்கள், லியோ உறுப்பினர்கள், முன்னாள் லியோ தலைவர்கள், புதிய லியோ அங்கத்தவர்கள் மற்றும் பெற்றோர்கள் என பலரும் பங்கேற்றனர்.