மட்டக்களப்பு வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் கொரோனா தொற்றாளர்கள் இனங்கானப்பட்டதனை தொடர்ந்து தனிமைப்படுத்தல் ஊரடங்குச்சட்டம் வாழைச்சேனை பொலிஸ் பிரிவு முழுவதும் தொடர்ந்தும் 15 நாட்களாக அமுல்படுத்தப்பட்டு வருகிறது.
இதனால் மக்களின் அன்றாட இயல்பு வாழ்க்கை முற்றாக பாதிப்படைந்த நிலையில் இம்மக்களின் செய்திகளை சமூகப் பொறுப்போடு சம்பந்தப்பட்டவர்களுக்கு கொண்டுசெல்லும் அரச மற்றும் தனியார் ஊடகங்களில் பிராந்திய செய்தியாளர்களாக பணியாற்றும் இப்பிரதேசத்தை சேர்ந்த தமிழ், முஸ்லிம் ஊடகவியலாளர்களும் பாதிப்படைந்துள்ளனர்.
இந்நிலைமையினை கருத்தில் கொண்டு மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் க.கருணாகரனிடம் கல்குடா மீடியா போரத்தின் பணிப்பாளரும் ஊடகவியலாளருமான எம்.ரீ.எம்.பாரிஸ் விடுத்த வேண்டுகோளுக்கினங்க சிறுவர் மற்றும் பெண்கள் மேம்படுத்தல் பணிகளில் முன்னின்று செயற்பட்டுவரும் மட்டக்களப்பு சேகிள் தன்னார்வுத் தொண்டு நிறுவனத்தின் இளம் பெண்கள் பிரிவினால் அப்பகுதி ஊடகவியலாளர்களுக்கு கைகளை தொற்று நீக்கும் திரவங்கள், முகக்கவசங்கள் உள்ளிட்ட உலர் உணவு நிவாரண பொருட்களும், மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் வழங்கி வைக்கப்பட்டன.
இந் நிகழ்வில் அரச தகவல் திணைக்களத்தின் மாவட்ட தகவல் அதிகாரி வடிவேல் ஜீவானத்தன், சேகிள் அமைப்பின் பிரதிநிதிகளான
அஜானி காசிநாதர் மற்றும் வசந்தகலா பிரதீபன் உள்ளிட்ட ஊடகவியலாளர்கள் பலரும் கலந்துகொண்டனர்.