மட்டக்குளி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கதிரான பாலத்திற்கு அருகில் இருந்து நபர் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. நேற்று மாலை மட்டக்குளி பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. கந்தானை பகுதியைச் சேர்ந்த 76 வயதுடைய நபர் ஒருவரே சடலமாக மீட்கப்பட்டவராவார். சடலம் பிரேத பரிசோதனைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், பிரேத பரிசோதனை இன்று நடைபெறவுள்ளதாக மட்டக்குளி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.