மட்டக்களப்பு ஏறாவூர் வாவியில் உல்லாச படகுச்சேவையை, நகர சபையின் தவிசாளர் எம்.எஸ்.சுபைர் சம்பிரதாய பூர்வமாக ஆரம்பித்து
வைத்தார்.
ஏறாவூர் வாவியோரம் அமைக்கப்பட்டுள்ள சிறுவர் பூங்காவிற்கு பொழுதுபோக்காக வரும் சிறுவர்கள் இப்படகுச்சேவையைப் பயன்படுத்தலாமென
அறிவிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி திட்டத்தின் கீழ் ஏறாவூர்ப் பிரதேத்தில் பெண்களை வலுவூட்டும் நிகழ்ச்சிக்கமைய இப்படகுச்சேவையை நடாத்துவதற்காக
கடந்த வருடம் பன்னிரண்டு இலட்சம் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது.
கடந்தகால நிவாகத்தினால் முறையான செயற்பாடுகள் மேற்கொள்ளப்படவில்லை என சுட்டிக்காட்டிய நகர சபை தவிசாளர் தற்போது, மீனவர் கூட்டுறவுச்சங்கம் மட்டக்களப்பு மாவட்ட கடற்றொழில் திணைக்களம் மற்றும் கிழக்கு மாகாண சுற்றுலாத்துறை அமைச்சு அலுவலகத்தில் அனுமதியைப்பெற்று, நகர சபைக்கு வருமானம் ஈட்டும் முகமாக இச்சேவையினை ஆரம்பித்துள்ளதாகக் குறிப்பிட்டார்.