மட்டு.களுதாவளையில் தேசிய மட்டத்தில் சாதனை படைத்த மாணவர்களுக்கான பரிசளிப்பு விழா

0
107

மட்டக்களப்பு பட்டிருப்பு கல்விவலயத்திற்குட்பட்ட பாடசாலைகளிலிருந்து தேசிய மட்டத்தில் சாதனை படைத்த மாணவர்களுக்கான பரிசளிப்பு விழா களுதாவளை மகாவித்தியாலய கேட்போர் கூடத்தில் இன்று நடைபெற்றது.

கடந்த 5 வருடங்களாக பட்டிருப்பு கல்வி வலயத்திலிருந்து மாகாணம், தேசிய மட்டம் வரையில் கல்வி மற்றும் இணைப் பாடவிதான செயற்பாடுகளில் சாதனை படைத்த மாணவர்கள் சான்றிதழ்கள் மற்றும், கேடயங்கள் வழங்கி கௌரவிப்பட்டனர்.

பட்டிருப்பு வலயக் கல்விப் பணிப்பாளர் சி.சிறிதரன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் மதத் தலைவர்கள், கிழக்குப் பல்கலைக் கழகத்தின் சிரேஸ்ட விரிவுரையாளர் சந்திரகலா மகேந்திரநாதன், தொழிலதிபர் தவஞானசூரியம் உட்பட கல்வி அதிகாரிகள், ஓய்வு பெற்ற கல்வி அதிகாரிகள், அதிபர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.