மட்டு.கோட்டைக்கல்லாறு மகா வித்தியாலயத்தியாலய மாணவர்களின் சுகாதாரம் தொடர்பான வைத்திய பரிசோதனைகள் இடம்பெற்றன

0
136

மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிற்குட்பட்ட கோட்டைக்கல்லாறு மகா வித்தியாலய மாணவர்களின் சுகாதாரம் தொடர்பான வைத்திய பரிசோதனைகள் இன்று இடம்பெற்றன.


பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ஏ.உதயசூரிய வழிகாட்டலில், மேற்பார்வை பொதுச் சுகாதார பரிசோதகர் எஸ்.யோகேஸ்வரன் ஒழுங்கமைப்பில் வைத்திய பரிசோதனைகள் நடைபெற்றன.


மாணவர்களின் உயரம், நிறை, உடற் திணிவு சுட்டி, போசாக்கு குறைபாடு, கண்பார்வை,பற்சுகாதாரம், போன்றவை பரிசோதிக்கப்பட்டன.


பிரதேச பொதுச் சுகாதார பரிசோதகர்களான கஜானன், ஜீவிதன் ஆகியோர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.