மட்டக்களப்பு வாழைச்சேனை புணானை பிரதான வீதியில் நேற்று மாலை இடம்பெற்ற விபத்தில் 2 பேர்
உயிரிழந்துள்ளதாக வாழைச்சேனைப் பொலிசார் தெரிவித்தனர்.சிலாபம் பகுதியில் இருந்து காத்தான்குடி நோக்கிச் சென்ற
வேனும்,கல்முனையில் இருந்து கதுருவெல நோக்கி பயணித்த
தனியார் பேருந்தும் நேருக்கு நேர் மோதியதில் இவ் விபத்து
இடம்பெற்றுள்ளது.
விபத்தில் வேன் சாரதியும் 3 மாதக் கைக்குழந்தையும் உயிரிழந்துள்ளதுடன் வேனில் பயணித்த 5 பேர்
காயங்களுக்குள்ளாகி வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர்
மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
பேருந்து சாரதி கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.