மஸ்கெலியா, சாமிமலை பகுதியில் மனநலம் பாதிக்கப்பட்ட ஒருவரை தாக்கிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு தலா 500,000 பிணையில் விடுதலை செய்யப்பட்ட மூவர் எதிர்வரும் 13 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்
கவரவலை பகுதியை சேர்ந்த துரைராஜ் சண்முகநாதன் என்ற நபரே சந்தேக நபர்களால் கடந்த 30 ஆம் திகதி தாக்குதலுக்குள்ளாகினார்
அவர் மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக கிளங்கன் ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல பட்டு அங்கு இருந்து கண்டி போதனா வைத்திய சாலைக்கு மாற்றப்பட்டார்.
கண்டி போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று டிக்கோயா- கிளங்கன் ஆதார வைத்தியசாலைக்கு மீண்டும் மாற்றம் செய்து தற்போது சிகிச்சை பெற்று, மேலதிக சிகிச்சைக்காக நாவலப்பிட்டி ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு அங்கு மீண்டும் சிகிச்சை பெற்று வருகிறார்.
அவர் மீது தாக்குதல் நடத்தி காய படுத்திய மூன்று சந்தேக நபர்களை மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் பணிப்புரையில் கைது செய்து ஹட்டன் நீதிமன்றில் கடந்த 3 ம் திகதி ஆஜர் ஆஜர்படுத்தபட்ட போது பதில் நீதிவான் , தலா ஒருவருக்கு 500,000 ரூபாய் பெறுமதியான சரீர பிணையில் விடுதலை செய்தார்.
எனினும், புதன்கிழமை (06) மன்றில் ஆஜராகிய ரூபாய் 7500 ரூபாய் ரொக்கப் பிணையில் செல்லும் படி உத்தரவு பிறப்பித்தது இருந்தார்.
அதன்படி புதன்கிழமை (6 ) அன்று மூன்று சந்தேக நபர்களும் ஹட்டன் நீதி மன்றத்தில் ஆஜராகி இருந்தனர். வாதி பிரதிவாதிகளின் சட்டத்தரணி களின் வாதங்கள் முடிய சந்தேக நபர்களை எதிர் வரும் 13 ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.