மன்னார் மாவட்டத்தில் தற்போது வரை 1083 பீ.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில் தற்போது வரை 12 பேர் கொரோனா தொற்று உள்ளவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் டி.வினோதன் தெரிவித்தார்.
மன்னார் பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் இன்று திங்கட்கிழமை(2) காலை இடம் பெற்ற ஊடக சந்திப்பின் போது கருத்து தெரிவிக்கையிலேயே அவர் அவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்;
மன்னார் மாவட்டத்தில் கடந்த மாதம் கொரோனா தொற்றுள்ளவர்கள் 12 பேர் அடையாளம் காணப்பட்டனர்.
இவர்களில் 10 பேர் பட்டித்தோட்டம் பகுதியில் கட்டிட வேளை மேற்கொண்டது போது தொற்று உள்ளவர்கள் என கண்டறியப்பட்டுள்ளனர்.
ஏனைய இரண்டு பேரூம் பேலிய கொடை கொரோனா கொத்தனியுடன் தொடர்பு உள்ளவர்கள்.
இவர்களில் 11 பேர் இரணவில சிகிச்சை நிலையத்திற்கும், ஒருவர் கந்தக்காடு சிகிச்சை நிலையத்திற்கும் அனுப்பி வைக்கப்பட்டிருந்தனர்.
இந்த நலையில் 9 பேர் தமது சிகிச்சைகளை நிறைவு செய்து தமது வீடுகளுக்கு திரும்பி உள்ளனர்.தற்போது வரை மன்னார் மாவட்டத்தில் 1083 பீ.சி.ஆர். பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அவற்றில் பீ.சி.ஆர் 767 பரிசோதனைகள் யாழ் போதனா வைத்தியசாலையிலும், 316 பீ.சி.ஆர். பரிசோதனைகள் அனுராதபுரம் போதனா வைத்தியசாலையிலும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
-குறித்த பரிசோதனைகளின் போதே குறித்த 12 பேரூம் கொரோனா தெற்று உள்ளவர்கள் என அடையாளம் காணப்பட்டிருந்தனர்.
தற்போது தொற்று உடையவர்களுடன் தொடர்பு உள்ளவர்கள் என்ற அடிப்படையிலும் ஊரடங்குச் சட்டம் அமுலில் உள்ள பிரதேசங்களில் இருந்து இங்கு வந்து தங்கி இருந்த நிலையில் 173 பேர் சுய தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
-மன்னார் புதுக்குடியிறுப்பு பகுதியில் தொற்றுள்ள ஒருவருடன் தொடர்பாக இருந்த 33 பேரூக்கு பீ.சி.ஆர். பரிசோதனைகள் மேற்கொள்ளப்படவுள்ளது.
-மேலும் கொழும்பில் தொற்று உள்ளவர் என அடையாளம் காணப்பட்ட நபருடன் மன்னார் வங்காலை பகுதியில் தொடர்பில் இருந்தவர்களுக்கும்,முசலி பகுதியில் கொழும்பு மற்றும் மேல் மாகாணங்களில் இருந்து வந்து தங்கி இருந்தவர்களுக்கும் நாளை செவ்வாய்க்கிழமை பீ.சி.ஆர்.பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட உள்ளதோடு மாந்தை மேற்கு மூன்றாம் பிட்டி பகுதியிலும் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படவுள்ளது.என அவர் மேலும் தெரிவித்தார்.