29 C
Colombo
Saturday, July 27, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

மயிலத்தமடு,மாதவனை கால்நடை பண்ணையாளர்களின்போராட்டம்: 200வது நாளை எட்டியது

மட்டக்களப்பு மயிலத்தமடு, மாதவனை கால்நடை பண்ணையாளர்களின் போராட்டம் ஆரம்பமாகி இன்றுடன் 200வது நாளை பூர்த்திசெய்யும் நிலையில் இன்றைய தினம் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

மயிலத்தமடு,மாதவனை கால்நடை பண்ணையாளர்கள் அமைப்பின் ஏற்பாட்டில் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தில் பொத்துவில் தொடக்கம் பொலிகண்டிவரையான மக்கள் இயக்கத்தின் இணைப்பாளர் வேலன் சுவாமிகள், சிவில் சமூக செயற்பாட்டாளர் சிவயோகநாதன் உட்பட பெருமளவான சிவில் சமூக செயற்பாட்டாளர்கள், கால்நடை பண்ணையாளர்கள் கலந்துகொண்டனர்.


சித்தாண்டி முச்சந்தி விநாயகர் ஆலயத்திலிருந்து கவனயீர்ப்பு ஊர்வலம் ஆரம்பமாகி
சித்தாண்டி மகா வித்தியாலயம் வரையில் வருகை தந்ததுடன் அங்கு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. மயிலத்தமடு,மாதவனை பகுதியில் அத்துமீறிய பயிர்செய்கையாளர்கள் தொடர்ச்சியாக அத்துமீறல்களை முன்னெடுத்துவரும் நிலையில் இதுவரையில் அவற்றினை கட்டுப்படுத்த எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையென இங்கு குற்றஞ்சாட்டப்பட்டது.


அரசியல்வாதிகள் பல்வேறு வாக்குறுதிகளை வழங்கியபோதிலும் தமது மேய்ச்சல் தரையினை மீட்பதற்கு எந்தவிதமான ஆக்கபூர்வமான செயற்பாடுகளையும் முன்னெடுக்கவில்லையெனவும் பண்ணையாளர்கள் கவலை தெரிவித்தனர்.
தமிழர் பகுதிகளில் முன்னெடுக்கப்படும் இவ்வாறான காணி அபகரிப்புகளை தடுத்துநிறுத்துவதற்கு சர்வதேச நாடுகள் இதுவரையில் எந்தவிதமான பணிகளையும் முன்னெடுக்கவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles