புகையிரத சாரதிகளினால் ஆரம்பிக்கப்பட்ட பணிப்புறக்கணிப்பு நான்காவது நாளாகவும் இன்று (10) தொடர்வதாகவும், இதன் காரணமாக இன்று காலை 20 அலுவலக புகையிரதங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.
இரண்டாம் வகுப்பு பதவி உயர்வு தாமதம், ஆட்சேர்ப்பு தாமதம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இந்த பணிப்புறக்கணிப்பு இடம்பெறுகின்றது.
இதனால் இன்றும் புகையிரத பயணிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர்.
மேலும், தினமும் மக்கள் நடமாட்டம் அதிகமாக காணப்படும் புகையிரத நிலையங்கள் பலவும் இன்று வெறிச்சோடி காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
இருப்பினம் பணிப்புறக்கணிப்பு காரணமாக சில புகையிரதங்களில் கடும் நெரிசல் காணப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.