மின்சார கட்டணம் 35 சத வீதத்தினால் குறைக்கப்படுவதே ஆரோக்கியமானது – ஜனக ரத்நாயக்க

0
75

மின்சார சபை பெற்றுக்கொண்டுள்ள இலாபத்தை, மக்களுக்கு உரியவாறு பகிர்ந்தளிக்கப்படுவதை அரசாங்கம் உறுதிப்படுத்துமாயின், மின்சார கட்டணம் 35 சத வீதத்தினால் குறைக்கப்படுவதே ஆரோக்கியமானது என, இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

மக்களின் நலன்கருதி, 21.9 சத வீதத்தினால் மின்சார கட்டணத்தை குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டமை மகிழ்ச்சியளிக்கிறது.

இருந்த போதிலும், கடந்த காலங்களில் அமுல்படுத்தப்பட்ட மின்சார கட்டண உயர்வால், மின்சார சபை பெற்ற இலாபத்தை, அதன் பங்காளர்களான பாவனையாளர்களுக்கு, உரியவாறு பகிர்ந்தளிக்க வேண்டியது கட்டாயமாகும்.

அது தொடர்பான தெளிவு, மக்களுக்கு இருக்க வேண்டும்.

2023 இல் மாத்திரம், மின்சார சபை வருமானமானது 62 பில்லியன்களாக பதிவாகியுள்ளது.

இந்த ஆண்டு ஜனவரி மற்றும் பெப்ரவரி காலப்பகுதிகளில், கிட்டத்தட்ட 35 பில்லியன் ரூபா வருமானம் கிடைத்துள்ளது.

அப்படியாயின், மின்சார சபை பெற்றுக்கொண்டுள்ள சுமார் 95 சத வீத இலாபத்தை, பாவனையாளர்களுக்கு வழங்க வேண்டும்.

அதனை, நேரடியாக மின்சாரக் கட்டண குறைப்பின் ஊடாகவே வழங்க முடியும்.
அந்தவகையில், 22 வீத மின்சார கட்டண குறைப்பை, 35 வீதமாக குறைப்பதற்கு, அரசாங்ம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அதுவே நியாயமும் கூட.
இந்தியா – இலங்கை மின்னணு வர்த்தக உடன்படிக்கை வரவேற்கத்தக்கது.
உலக நாடுகளால் ஏற்றுக் கொள்ளப்பட்ட இதுபோன்ற எல்லை தாண்டிய வர்த்தக உடன்படிக்கைகள் வெற்றிகரமான ஒரு உபாயமாகவே பார்க்கப்படுகிறது.

இருப்பினும், வர்த்தக உடன்படிக்கை, அரசியல் தலையீடுகளற்ற வர்த்தக நோக்கத்தை மாத்திரம் முன்னிலைப்படுத்துவதாக அமையும் என்பதை, அரசாங்கம் உறுதிப்படுத்த வேண்டும்.

என பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ஜனக ரத்நாயக்க குறிப்பிட்டுள்ளார்.