நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள கொவிட் 19 கொரோனா தொற்று காரணமாக மின்சார சபையின் நுகர்வோர் ஒருங்கிணைப்பு அதிகாரிகள் சங்கம் பொதுமக்களிடம் சில கோரிக்கைகளை முன்வைத்துள்ளது.
அதன் படி, வீடுகளில் உள்ள மின்சார அளவீட்டுப் பெட்டியின் மானி தெளிவாகத் தெரியும்படி வைத்திருக்குமாறும், பட்டியலை வழங்க வரும் மின்மானி வாசிப்பாளர் களிடத்தின் அருகில் செல்லாது மின்சார பட்டியலைப் பெற்றுக் கொள்ளுமாறும் கோரப்பட்டுள்ளது.
இது தொடர்பில் பொதுமக்கள் அதிக கவனம் செலுத்து மாறும் அந்த சங்கத்தால் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.